Latest News

July 20, 2015

சிவாஜிங்கம் தேர்தலில் போட்டியிடுவது என்னால்தான் - மஹிந்த ராஜபக்ஸ
by Unknown - 0

தம்மாலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துனர் எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தை தாமே முடிவுக்குக்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்குக்கொண்டு வந்த காரணத்தினால் சிவாஜிலிங்கம் போன்ற பலர் பொதுத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கெர்டக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடிய சூழ்நிலையை தமது அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுத் தோதலில் போட்டியிடக் கூடிய சந்தர்ப்பத்தை தமது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments