Latest News

July 30, 2015

நீதிமன்றத் தாக்குதல்: யாழ் மாவட்டத்தின் கலாசார சீரழிவு காடைத்தனம், ரவுடித்தனம் வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டம் - பிணை மனுவை நீடிய திகதிக்கு நீதிபதி இளஞ்செழியன் ஒத்திவைத்தார்.
by admin - 0

யாழ்ப்பணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, யாழ் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களுக்கான 22 பிணை மனுக்கள் மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, யாழ் மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் அந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நீடிய திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 

இந்த மனுக்கள் வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தொகுதி மீதான தாக்குதல் நடத்தியமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியமை, அரச வாகனங்களுக்கு சேதம் எற்படுத்தியமை போன்ற பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த நூ}ற்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களுக்கு யாழ் மாவட்ட நீதிவான் சிவகுமார் ஏற்கனவே பிணை வழங்கி தீர்ப்பளித்திருந்தார். 

பாரதூரமான குற்ச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட சந்தேக நபர்களி;ன் பிணை மனுக்கள் நீதவான் சிவகுமாரினால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட பிணை தீரப்புக்கு எதிராக 22 பிணை மீளாய்வு மனுக்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்டன புங்குடுதீவில் மரணமாகிய வித்யாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டம் செய்தபோது, சில விசமிகளின் தூண்டுதலால் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தேகநபர்களின் பின்னணி என்பவற்றைக் கவனத்தில்; எடுத்து, பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரினர். 

நீதிபதிகளின் இதயத்தைத்; தாக்கிய தாக்குதலே நீதிமன்ற தாக்குதல் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், எந்த நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியதோ, அதே நீதிமன்றத்திற்கு வந்து கருணை காட்டுமாறு கோருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை பாரதூரமான குற்றச் செயலாகும். இந்த பிணை மனுக்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாவமன்னிப்போ, கருணையோ கிடையாது. அவ்வாறு மன்னிப்பளிப்பதோ கருணை காட்டுவதோ என்பது, நீதிமன்றின் மீதும் நீதிபதிகள் மீதும் நம்பிக்கையில்லாத நிலையை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்படும் நபர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 20 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரச ஆதன சொத்தழித்தல் சட்டம் பரிந்துரை செய்கின்றது. அதேநேரம், நீதவான் சிவகுமாருடைய தீர்ப்பில் என்ன சட்ட பிழை விடப்பட்டிருக்கின்றது என்று, அந்த சட்டப் பிழையை முன்காட்டத்தவறியிருப்பதனால் பிணை மனு ஆரம்பித்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். 
அப்போது, மன்றில் சந்தேக நபர்களுக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், சந்தேக நபர்களின் உறவினர்கள் நீதி மன்றத்தில் நிற்கின்றார்கள். சந்தேக நபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளரர்கள். எனவே, அவர்களின் வேதனையை கவனத்தில் எடுத்து, பிணை மனுக்களை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யாமல்,  நீடிய தவணை தருமாறு மன்றை கோரினர்;.
அதனையடுத்து நீதிபதி தனது கட்டளையில் தெரிவித்ததாவது: 
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத்தொகுதி மீதான தாக்குதலானது, நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விழுந்த அடியாக மன்று கருதுகின்றது
இந்தத் தாக்குதலானது யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், மட்டுமல்லாமல், வன்முறையாட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மற்றைய பாகங்களில் உள்ள மக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்து மக்களைக் கீழ்த்தரமாகக் கணிப்பிடும் அளவிற்கு நடத்தப்பட்ட தாக்குதலாக அமைந்துள்ளது. 
யாழ் மாவட்டம் கல்வி, கலாசாரம் பாரம்பரியம் என்பவற்றைப் பிரத்தியேகமாகக் கொண்டது. இங்கு வாழும் மக்கள், படித்தவர்கள். பண்புள்ளவர்கள் தமது கலாசாரத்தை மேலோங்க பாதுகாப்பவர்கள் என்பது பொதுவான கருத்தாகும். யுத்த காலத்தில்கூட, போரட்டத்தில் ஈடுபட்ட எந்தத் தரப்பினராலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை நீதிபதிகள் மீதும் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவி;ல்லை. இத்தகைய புனித தன்மை கொண்ட யாழ் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கும் வகையிலும் நீதிபதிகளின் மனச்சாட்சியைத் தட்டிப்பார்த்து சோதிக்க முயற்சித்த ஒரு செயலாகவுமே, இந்தத் தாக்குதலை மன்று நோக்குகின்றது. 

ஆர்ப்பாட்டம்  செய்வது ஜனநாயக உரிமை என கூறிக்கொண்டு, வன்முறை பேயாட்டம் ஆடியது மட்டுமன்றி, அந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தை நோக்கி ஏன் வந்தது? மன்றின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பன குறித்து, குற்றப்புலனாய்வின் மூலம் கண்டறிய வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவும் மன்று கருதுதுகின்றது. 

சட்டவாட்சியைப் பரிசோதித்து நீதிமன்றத்தினுடைய சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலான இந்த வழக்கில், தேர்தல் காலத்தில் பிணை வழங்க முடியாது. விரைவாக விசாரணை செய்வதற்கும் பிணை மனுக்களில் விதிவிலக்கான காரணங்கள் எதுவுமில்லை.  இருப்பினும் இயற்கை நீதிக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பிரஜையினுடைய கோரிக்கை மனுவை மன்றினால் விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டியது முக்கியம் என மன்று கருதுகின்றது.  

அதேநேரம், பிணை மனுக்களில் நீதிவான் விட்ட சட்டப்பிழை என்ன என்பதும், இவர்களுக்கு, பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான காரணம் என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. பிணை வழங்குவதற்கான விசேட காரணம் என்ற அடிப்படையில் உரிய ஆவணங்களும் இந்த மனுக்களில் இணைக்கப்படவில்லை. இருந்த போதிலும் பிரஜைகளின் கோரிக்கைக்கு அமைவாக,  பிணை மனுவை, விசாரணைக்க உட்படுத்தப்பட வேண்டும் என்ற நியதியி;ன் அடிப்படையில் 22 பிணை மனுக்களும் விசரணைக்கு மன்றினால் ஏற்றுக்காள்ளப்படுகின்றது என தெரிவித்த நீதிபதி  செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு விசாரணைகளை ஒத்தி வைத்தார். 
« PREV
NEXT »

No comments