தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.குறிப்பாக கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ள முன்னணியின் வேட்புமனு தாக்கல் அவதானிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இன்றைய தினமே வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. இதேவேளை வெள்ளிக்கிழமை வரை
அங்கீகரிக்கப்பட்ட 47 கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 111 சுயேட்சைக்குழுக்களும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளன. மேலும் சில சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையினில் தமிழர் விடுதலைக்கூட்டணி ,இராமநாதன் அங்கயன் தலைமையினில் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணி,வித்தியாதரன் தலைமையிலான சுயேட்சை அணி என்பவை தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
No comments
Post a Comment