10 ஓவர்கள் கொண்ட அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம்.
ஞானம்ஸ் விளையாட்டு கழகத்தினால் வடமராட்சி ரீதியில் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி 10 ஓவர்கள் கொண்ட அரையிறிதியில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி ஜங்கரா வி.க மோதியது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மைக்கல் விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றது.
அமீர் 22 ஓட்டங்களையும் ரகு 16 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் சின்னா 2 விக்கட்களையும் ரமேஸ் 2 விக்கட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பபாடிய ஜங்கரா விளையாட்டு கழகம் 9.1 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 69 ஓட்டங்களை பெற்றனர்.
சின்னா 30 ஓட்டங்களையும் சதீஸ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தினோஜன், வீவிலியன் 3 விக்கட்களை கைப்பற்றினர்.மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment