Latest News

July 13, 2015

இறுதிப்போட்டிக்கு தெரிவானது இனுவில் கலைஒளி விளையாட்டு கழகம்.
by admin - 0


இறுதிப்போட்டிக்கு தெரிவானது   இனுவில் கலைஒளி விளையாட்டு கழகம்.
ஞானம்ஸ் விளையாட்டு  கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டில் 8 ஓவர்கள் கொண்ட அரையிறிதியில் மாலுசந்தி மைக்கல் வி.க எதிர்த்து இனுவில் கலைஒளி வி.க மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைக்கல் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன் படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கலை ஒளி விளையாட்டு கழகம்  8 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றது.

பிரதீசன் 27 ஓட்டங்களையும் கோகுலன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் அச்சுதன் 3 விக்கட்களையும் பிபுலியன் 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.பதிலுக்கு துடுப்பபாடிய மைக்கல்  விளையாட்டு கழகம் 7.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை பெற்றனர்.

ரகு 15 ஓட்டங்களையும் பிரசாந் 7 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தீபன் 4 விக்கட்களையும ஜீவா 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.இனுவில் கலைஒளி விளையாட்டு கழகம்  35 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தொரிவானது

எஸ்.செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments