தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இந்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இரட்டை மனப்போக்கை கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளா வை.கோ இதனைக் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் பாதிப்பு இருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இது ஜெயலலிதா அறிந்தே தாக்கல் செய்யப்பட்டதா? என்பது தொடர்பில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று வை.கோ கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளால் பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment