Latest News

July 05, 2015

இலங்கை தொடர்பில் மேலும் அவதானம் தேவை - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்
by admin - 0

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சில இலங்கையதொடர்பான கடிதம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளன. 

இலங்கை தொடர்பில் மேலும் அவதானத்துடன் செயயற்படுமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக சாதகமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அதனை தொடர்ந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விஷேடமாக கடந்த ஆட்சியின் போது இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகள் திருப்தி அளிக்க கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை என்றும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தற்போதைய அரசாங்கம் மனித உரிமை நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments