Latest News

July 05, 2015

மகிந்த மைத்திரி நடிப்பு -த.தே.கூ பின் இன்றைய அரசியல் விசேட செய்தி
by admin - 0

1.ஜனாதிபதி மைத்தரி 
2.மைத்தரி மகிந்த இரகசிய சந்திப்பு
3.அதன்பின் பாரளுமன்ற கலைப்பு
4.மகிந்தவுடன் மைத்திரி இணைவு 

இவைகள் நடந்தவை இனி நடக்கப்போவது
1.மகிந்தவின் வெற்றி 
2.மைத்திரியின் கையாலாத்தனம் 
3.பாரளுமன்றம் மகிந்தவை பிரதமர் ஆக்குதல் 
4.விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம்(நாடகம்)
5.மைத்திரி குண்டுத் தாக்குதலில் கொல்லப்படுகிறார்.
6.பிரதமரான மகிந்த ஜனாதிபதியாகிறார்
7.பழையபடி கோத்தபாய பாதுகாப்பு அமைச்சர்.
8.தமிழ்தேசிய கூட்டமைப்பு - புலிகள் கொள்கையே சரி சிங்களம் எங்களை இப்படியே ஏமாற்றிக்கொண்டு இருக்கும் ...
தொடரும்...

மக்களே சிந்தியுங்கள்

அன்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மைத்திரிபா சிறிசேன எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற வாய்ப்பேச்சு உலாவியது. அதனை கேள்வியுற்ற அப்போதைய ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்போதைய சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவை அலரி மாளிகைக்கு அழைத்து கொச்சிக்காயுடன் அப்பம் உட்கொண்டபடி பரவும் வாய்ப் பேச்சு குறித்து கேட்டபோது தான் பொது வேட்பாளராக போட்டியிடவில்லை என மைத்திரி மஹிந்தவிடம் கூறியுள்ளார். 

சில தினங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு காக்கை  காட்டி தான் பொது வேட்பாளர் என பிரசித்தமாகக் கூறினார்.

அது அன்றைய மைத்திரிபால சிறிசேனவின் நடிப்பாகும்.

அந்த நடிப்பின் இரண்டாம் கட்டம் கடந்த 25ம் திகதி மிரிஹான கல்வல வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் மருமகன் வீட்டில் மஹிந்தவை சந்தித்தமையாகும். 

அதன்போது முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்க மைத்திரிபால இந்த சந்திப்பின் போது இணக்கம் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் இந்த இணக்கத்தின் அடிப்படையிலாகும்.

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு காக்கா  காட்டியது போல் இன்று ஜனவரி 8ம் திகதி மக்களால் புறக்கணித்து வீட்டுக்கு விரட்டியடித்த மஹிந்தவுடன் இணைந்து மக்களுக்கு காக்கா காட்ட முயற்சிக்கிறார்.
 
இது இன்றைய மைத்திரிபால சிறிசேனவின் நடிப்பாகும்.
இந்த நடிப்புகள் மைத்திரியை எங்கே கொண்டு செல்லும் என்பதை மேலே ஒரு உண்மைகள் மற்றும் உண்மைக் கற்பணை பகுதி கொடுக்கப்பட்டுள்ளது .

இதில் பல கேள்விகள்  கூட்டமைப்பை நோக்கி பாய்கிறது அதாவது சிங்களத்தின் நடிப்புகள் எப்படியானவை என்பதை அவர்கள் இன்றும் உணர மாட்டாதவர்களாகவே இருக்கிறார்களா இல்லை பெரியம்மா இந்தியாவையும் பெரியண்ணன் அமெரிக்காவையும் திருப்தி படுத்த போகிறார்களா? என்பதே மக்களின் கேள்வி 



« PREV
NEXT »

No comments