Latest News

July 05, 2015

பிரித்தானியாவில் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவராக ஜேம்ஸ் பெர்ரி தேர்வு!
by Unknown - 0

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவராக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியான ஜேம்ஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவராக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியான ஜேம்ஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். உழைப்பாளர் கட்சியின் எம்.பி சொபன் எம்சிடொனக் மூத்த துணை தலைவராகவும், ரிச்சர்ட் ஹாரிங்டன் ஜோன் ரியான் மற்றும் வெஸ் ஸ்ரிட்டிங் ஆகியோர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் குறித்த ஐ.நா சபையின் விசாரணைக்கு விருப்பம் தெரிவித்துள்ளது. போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஜேம்ஸ் பெர்ரி கூறியதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. முன்னாள் தலைவர் லீ ஸ்காட்டை போன்று செயல்படுவது கடினம் என்றாலும் அவரை போல் சிறப்பாக செயல் பட முயற்சி செய்வேன்.

வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா சபை போர் குற்றம் குறித்த தனது விசாரணை அறிக்கையை வெளியிடவுள்ளது. இது தமிழர்களுக்கு முக்கிய காலகட்டமாகும். அறிக்கையின் முடிவு குறித்து எ.பி.பி.ஜி விவாதம் மேற்கொள்ளும்.

மேலும் இந்த விவகாரத்தில் பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட முன்மொழிவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதற்காக தங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளவர்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments