Latest News

July 20, 2015

ஐந்து டிரில்லியன் பெறுமதியான பிளாட்டின விண்கல் பூமிக்கு அருகில் பயணம்
by admin - 0

ஐந்து டிரில்லியன் பெறுமதியான பிளாட்டினத்தை கொண்ட விண்கல் ஒன்று நேற்று (19) அதிகாலை பூமியை கடந்து சென்றுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.00 மணியளவில் யூ.டப்ளியியு என்றழைக்கப்படும் குறித்த விண்கல் பூமிக்கு அருகாமையில் சென்றுள்ளது.

வடமேற்கு  ஆப்பிரிக்காவின் எரிமலைகளுடன் கூடிய தீவுகள் உள்ள கெனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலிருந்து ஸ்லூ என்ற திட்டத்தினூடாக தொலைநோக்கியூடாக இணையதளங்களில் ஔிபரப்பப்பட்டது.

இந்த விண்கல்லில் உள்ள விலை மதிப்பற்ற பிளாட்டினம் விரைவில் வெட்டியெடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள வானியலாளர் பொப் பெர்மன் இன்னும் 3 ஆண்டுகளில் இந்த விண்கல் மீண்டும் பூமியை நெருங்கி பயணிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த விண்கல் பூமிக்கு அருகில் இருக்கும் கிரகத்தை விடவும் 30 மடங்கு நெருங்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments