Latest News

July 20, 2015

முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம்திறப்பும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும்
by admin - 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட நடுவப்பணியகம் சனிக்கி்ழமை (18/07/2015) திறந்துவைக்கப்பட்டதோடு திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.

திருகோணமலை திருஞானசம்பந்தன் வீதியில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தை தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பெயர் பலைகையை திரைநீக்கம் செய்ததுடன் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் திருமலை மாவட்டமுதன்மை வேட்பாளர் இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் திருமலை லட்சுமி நாராணயன் கோயில்உரிமையாளர் ராதா கிஸ்ணன் ஆகியோர் இணைந்து நடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து திருகோணமலைகடற்கரைவீதியிலுள்ள வெலிகடை தியாகிகள் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட தலைமை வேட்பாளரான இரா ஸ்ரீ ஞானேஸ்வரன் மற்றும் ஏனையவேட்பாளர்களான செல்வகுமார்
கேதீஸ்வரன் ,  .சந்திரகுமார் ,ஜீவேந்திரன், வாசுகி ஆறுமுகதாஸ் , ,தங்கேஸ்வரன் ஆகியோரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யம் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் தொகையானமக்கள் கலந்து கொண்டனர்.



« PREV
NEXT »

No comments