Latest News

July 20, 2015

தமிழ்த் தேசியமக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட நடுவப் பணியகத் திறப்புவிழாவும் வேட்பாளர் அறிமுகமும்
by admin - 0

தமிழ்த் தேசியமக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட நடுவப் பணியகத் திறப்புவிழாவும் வேட்பாளர் அறிமுகமும்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்) மட்டக்களப்பு மாவட்டநடுவப் பணியகம் சனிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்புமாவட்ட தமிழ்த் தேசியமக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அமைப்பாளர் சுரேஷ் தலைமையில் இலக்கம் 17 கோவிந்தன் வீதி மட்டக்களப்பில் அமைந்துள்ள பணியக திறப்பு விழா இடம்பெற்றது. தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் பெயர் பலைகையை திரைநீக்கம் செய்ததுடன் நாடாவினை வெட்டி அலுவலகத்தையும் திறந்துவைத்தார்.







தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட முதன்மைவேட்பாளர் நாகமுத்துபன்னீர்ச் செல்வம்இ மற்றும் ஏனைய வேட்பாளர்களான சமயலிங்கம் அண்ணாத்துரை, லோகராசா கருணாகரன், பாலகிருஸ்ணன் பிஜிதீபன், கிட்ணப்பிள்ளை பாக்கியராசா, காளிராசா சதீஸ்கான், உதயகுமாரன் உமாசங்கர், குலசேகரம் குகதாசன் ஆகியோரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யம் நிகழ்வும் இடம்பெற்றது.
« PREV
NEXT »

No comments