மகிந்தவை மீண்டும் ஆட்சி பிடத்தில் ஏற்ற முனைகிறது புதிய அரசாங்கம்தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment