Latest News

July 17, 2015

பிரித்தானியா சென்றடைந்த முதலமைச்சர் வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்தார்!
by admin - 0

பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

லண்டனில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், அங்கு எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்று ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளதுடன், வடக்கில் எதிர்கொள்ளப்படும் சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வார கால அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா வந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், லண்டனில் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments