Latest News

July 17, 2015

ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தால் 37 மலசல கூடங்கள் இன்று வழங்கி வைக்கபட்டுள்ளது
by admin - 0

ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தால் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சங்கானை கிழக்கு தானாவோடை கிராமத்தில் 4.7 மில்லியன் ருபா செலவில் 37 மலசல கூடங்கள் அமைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி தானாவோடை கிராமத்திலஇன்று முற்பகல் 11 மணியளவில்  அந்த அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் நீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைப்பின் பணிப்பாளர் கணேகதாசன் கலந்து கொண்டு மலசல கூடங்களுக்கான  பத்தரங்களை வழங்கி வைத்தார்.

தானாவோடைக் கிராமத்தில் அடிப்படைய வசதிகள் குறிப்பாக வீடு, மலசலகூடம், கிணறுகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கான முதற்கட்ட உதவிகளை செய்து கொடுக்கும் வகையிலையே மலசல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக உதவிகளை வழங்கி வைத்தந்த அமைப்பின் இணைப்பாளர்  தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் 43 மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக  ஒவ்வொரு மாணவர்களுக்கும் வருடாந்தம் 12000 ஆயிரம் ருபா காசோலை  வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வலி மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சின் ஐங்கரன், யாழ் மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர். ஏஸ்.தயாபரன், யாழ் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கொட்டை, மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்படப் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







« PREV
NEXT »

No comments