தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரம் வெளியிடப்படுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து தொடர்ந்து கிராம மட்ட ரீதியாக பிரச்சாரங்கள் முன்னெடுனக்க உள்ளதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்..
அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சசார நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைய முதலாவது பிரச்சாரக் கூட்டம் அடுத்த வாரம் யாழில் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்தும் பிரதேச ரீதியாக பிரச்சாரக் கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதே வேளையில் கிராம மட்டத்திலும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இக் கூட்டங்களில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனும் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சனைகளை உள்ளடக்கி தமிழ் மக்களுக்காக தீர்வைக் கோரி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
இதே வேளை நடைபெறவிருக்கும்; தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். இதற்கமைய கட்சியின் பிரச்சாரங்களை யாழில் முன்னெடக்க உள்ளோம். இதற்கு மக்கள் தமது ஆணையை வழங்குவார்கள் என்றும் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments
Post a Comment