மாளிகாவத்தை ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதற்கமைய சப்ராஸ் அஹமட் 77 ஓட்டங்களையும், முஹமட் ஹபீஸ் 54 ஓட்டங்களையும் பெற்று 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
317 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.1 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் லகிரு திரிமானே 56 ஓட்டங்களை பெற்றுகொண்டுத்தார், தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர்.
ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன
No comments
Post a Comment