Latest News

July 20, 2015

இந்தியாவிற்கெதிரான தனது முதலாவது டி20 வெற்றியைப் பதிவு செய்தது சிம்பாப்வே!
by Unknown - 0

இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி ஹராரே நகரில் இன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக சிபாபா 67 ஓட்டங்களை குவித்தார். மசாகட்சா (19), வில்லியம்ஸ் (17) ஓட்டங்களையும் எடுத்தனர். இதன்படி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்களைக் குவித்தது சிம்பாப்வே. இந்திய அணித் தரப்பில் புவனேஷ் குமார் மற்றும் எம்.எம். சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, பின்னி, படேல் ஆகியோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 146 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய அணியின் ரஹானே மற்றும் விஜய் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அவர்களில் ரஹானே 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை அடுத்து விஜயுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய உத்தப்பா 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். எனினம் ஏனைய வீரர்கள் சிறப்பாக சோபிக்காதமையால் 20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணியால் 9 விக்ெகட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனடிப்படையில் சிம்பாப்வே அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிராக முதலாவது டி20 வெற்றியைப் பெற்றுக்கொண்டது. போட்டியின் நாயகனாக சிபாபா தெரிவு செய்யப்பட்டார்.
« PREV
NEXT »

No comments