தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மெல்லிசை மன்னர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.
தற்போது இவருடைய உடல் சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதனுடைய இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகிற்கே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 87 வயதான இவர் இதுவரை 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


No comments
Post a Comment