வல்வெட்டித்துறை இ .த க மாணவன் ஈட்டி எறிதல் போட்டியில் 5ஆம் இடம்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் வவுனியாவில் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டியில் வல்வெட்டித்துறை தமிழ் இந்துக் கலவன் பாடசாவை மாணவன் அருளானந்தராசா நிருஷன், ஈட்டி எறிதல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளின் போது 17 வயது பிரிவிற்குட்பட்ட போட்டியில் ஆறு பேர் பங்குபற்றிய நிலையில் யாழ் மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய இந்த மாணவன் ஐந்தாம் நிலையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments
Post a Comment