Latest News

July 14, 2015

இலங்கை நாடாளுமன்ற தேர்தலை நாம் ஒரு வழமையான தேர்தலாக நாம் பார்க்கவில்லை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by admin - 0

இலங்கை நாடாளுமன்ற தேர்தலை நாம் ஒரு வழமையான தேர்தலாக நாம் பார்க்கவில்லை  மிக நீண்டகாலம் தமிழ் மக்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக்கும் கோ ட்பாடுகளுக்கும் வலுச்சேர்ப்பதற்கான அல்லது அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு ச ந்தர்ப்பமாகவே நாங்கள் இந்த தேர்தலை பார்க்கிறோம்.

இன்றைய தினம் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முக்கியமான நோக்கம் ஒன்றும் இருக்கின்றது. அது என்னவென்றால் இன்றைய 13ம் திகதி திம்பு கோட்பாடு உருவாக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்ற ய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களு க்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர். ஊடகங்களு க்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

 

தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக உன்மையான தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகம் ஆகிய கோட்பாடுகளுக்காக வாக்களித்திருக்கின்றார்கள். வாக்களித்துக் கொண்டிருக் கின்றார்கள். ஆனால் உன்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களின் கொள்கையை அடி யொற்றி தமிழ் தலமைகள் நடந்திருக்கிறார்களா?

 

என்ற பலமான கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம். இந்நிலையில் தமிழ் மக்களிடம் உள் ளார்ந்தமாக இருக்கும் கோட்பாடுகளை, கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கான மாற்ற த்துடன் கூடிய சந்தர்ப்பமாகவே தமிழ்தேசிய மக்கள் முன்னணி இம்முறை நாடாளுமன்ற தேர் தலை நோக்குகின்றது. திம்பு கோட்பாடு உருவாக்கப்பட்டு,

 

30 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. குறித்த திம்பு கோட்பாட்டை அடியொற்றியதாக இன்றுவரையில் நிலைத்திருக்கும் ஒரு கட்சியாக நாங்கள் இருக்கின்றோம். இந்நிலையில் தமி ழ்தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியானது தமிழ் மக்களின் நீண்டகால ஏமாற்றத்திற்கான முற்றுப்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

போர் நடைபெற்றபோதும், போர் நிறைவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் அகதிகளாகவும், அல்லல் படுபவர்களாகவும் வறுமையோடு வாழ்பவர்களாகவும், உரிமை மறுக்கப்பட்டவர்களாக வும், நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்கின்ற நிலைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி முற்றுப்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

என்றார்.   

 

..............................................................
« PREV
NEXT »

No comments