தேர்தல்களில் தமிழீழம், விடுதலைப்புலிகள், போராளிகள், விடுதலை, மாவீரர்கள் போன்ற வசனங்கள் அனல் பறக்கும் அதுதான் தமிழர்களின் மூச்சு ஆகவேதான் இப்படியான வசனங்களை வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்கு கிடைக்கும் வரை உச்சரிக்கும் மந்திரங்கள் . கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் உறுப்பினர்களும் இந்த தமிழ் மந்திரங்களை உச்சரிக்கின்றார்கள் அந்த வரிசையில் தற்பொழுது மகிந்த கட்சியில் யாழில் போட்டியிடும் அங்கயன் ராமநாதன் அவர்களும் சேர்ந்துள்ளார். தமிழீழத்தை உருவாக்க யாழ் மக்களின் ஆதரவை கேட்கிறார் மஹிந்த கட்சியின் முக்கிய மத்திய குழு தலைவர் அங்கையன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசிடம் இருந்து என் மக்களுக்கு குறிப்பாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதே எனது பிரதான நோக்கம். என வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் கூறிக்கொண்டிருந்தார்கள் அரசுடன் இருப்பவர்கள் துரோகிகள் என அரசு துரோகியாக இருக்கட்டும் ஆனால் நாங்கள் அரசியலிற்கு வந்து நான்கரை வருடத்தில் நான் எந்தப் பதவியிலும் இல்லாமல் அங்கீகாரம் இல்லாமல் தான் 4500 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன் மக்களுக்கு சேவை செய்துள்ளேன் ஆனால் இதே விடையத்தை பதவியில் இருந்த அல்லது அமைச்சர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதனை செய்தார்கள்.
நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை காலமும் செய்யாத விடயங்களையா இனிமேல் செய்யபோகிறார்கள் அவர்கள் ஊடாக மாற்றம் வரும் வருமென எதிர்பார்த்து எமது மக்களுக்ககோ பிரதேசத்துக்கோ நல்லது செய்வார்கள் என்று நினைத்து அது முடியாததால் தான் நாங்களே இன்று இளைஞர் படையுடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளோம். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத கை சுத்தமானவர்களே என்னோடு போட்டியிடுகின்றார்கள் இம்முறை எங்களை போல் இளைஞர்களுக்கு வாய்ப்பை தந்து ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். தமிழ் தேசியம் பேச்சிலும் பேப்பரிலும் இருந்தால் பத்தாது செயலில்காட்ட வேண்டும் நாங்கள் பாராளுமன்றம் போவோம் தேசிய அரசில் இணைந்து கொள்வோம் மாற்றத்தை கொண்டு வருவோம் எனவும் மற்றவர்கள் பிளேன் ரீ கேட்கிறார்கள் நாங்கள் சீனியை தா, தேயிலை தா , சுடுதண்ணிய தா தமிழீழத்தை அமைக்கிறோம் மேலும் தெரிவித்தார்
No comments
Post a Comment