Latest News

July 19, 2015

பாவலன் பத்மநாதனின் இறுதிக் கிரியை நிகழ்வுகள்
by admin - 0

பிரித்தானியாவின் சர்ரேவில் நடந்த உள்ளூர் லீக் ஆட்டமொன்றில், மார்பில் பந்து தாக்கியதால் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்ட, ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் பத்மநாதன் எனப்படும்  24  வயது இளைஞனே இவ்வாறு மரணமடைந்தார்.

பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கில் மானிப்பாய் பாரிஷ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காக ஆடிவந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று, லாங் டிட்டன் மைதானத்தில் நடந்த பிரிட்டிஷ் தமிழ் லீக் போட்டிகளில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அவர் காயமடைந்தவுடனேயே ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் மரணமடைந்தார்.

பாவலனின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு இறுதிக் கிரியைகள் இன்று 19.07.2015 காலை 8 மணிக்கு பருத்தித்துறையில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.




« PREV
NEXT »

No comments