Latest News

July 19, 2015

நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது
by admin - 0

கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்டசுற்று போட்டியில் இறுதிஆட்டதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டு கழகத்தை  எதிர்த்து ஆடிய  நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது


கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதி போட்டி [2015.07.19] இரவு 09:30 மணியளவில் கொலின்ஸ் மைதானத்தில் மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

இப் போட்டியில் இரு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில் தண்டனை உதை மூலம் நவஜீவன்ஸ் வி.கழகத்தினை சென் அன்ரனீஸ் வி.கழகம் 4:3 எனும் ரீதியில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை பெற்றது.
இப் போட்டியின் சிறந்த வீரனாக நவஜீவன்ஸ் வி.கழக வீரன் பிரியா தெரிவு செய்யப்பட்டார்.


நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது
Posted by விவசாயி=farmer on Sunday, July 19, 2015
« PREV
NEXT »

No comments