புனர்வாழ்வு பெற்ற போராளிகள், உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள். அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்ற அடிப்படையிலான வாழ்வாதார உதவித் திட்டமொன்று மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால்; இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராமிய, வர்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் யாழிலுள்ள அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...
வுடக்கு மாகாண சபையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் மாவீரர்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய முன்னாள் போராளிகளிடமிருந்து 6322 விண்ணப்பங்களும், மாவீரர் குடும்பங்களிமிருந்து 6030 விண்ணப்பங்களும், நசிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களிடமிருந்து 324 விண்ணப்பங்களும் கிடைக்கப்பபெற்றுள்ளன.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் உதவித் திட்டங்களை வழங்க உள்ளொம். இதற்காக 46 மில்லியன் ருபா ஒதுக்கப்பட்டு சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதிவிகளை வழங்கும் செயற்திட்டமே இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதே வேளை முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் இரண்டாம் கட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. இதற்கும் பல தரப்பினர்களுமு; உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன. எனவே விரைவில் அடுத்த கட்டச் செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைப்போம்.

No comments
Post a Comment