Latest News

July 15, 2015

மைத்திரியின் தலைமைக்கு ஆபத்து -நீக்க நடவடிக்கை
by admin - 0

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும தேர்தலில் தாம் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரத்தை மேற்கொள்ளப் போவதில்லை என்று மைத்திரி கூறியுள்ளார்.
 
அத்துடன் தேர்தலுக்கு பின்னர் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட மாட்டார் என்பதையும் அறிவித்துள்ளார்.
 
இது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் அவரை கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு மகிந்தவின் தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments