"குடித்த இளைஞர்களை பார்த்திருக்கிறோம்டாஸ்மாக்கை அடித்த இளைஞர்களை இப்போதுதான் பார்க்கிறோம்"உண்ணாவிரத போராட்டங்கள், முற்றுகை போராட்டங்கள், கண்ணீர் போராட்டங்கள் என பல போராட்டங்களை தமிழக மக்கள் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடத்திவிட்டார்கள்.ஒரு போராட்டத்திற்குகூட தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. நீதிமன்றம் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை மூட சொல்லியும் முழுமையாக அதை அரசு பின்பற்றவில்லை.
அதற்க்கான கொள்கையும் தமிழக அரசிடம் இல்லை. நீதிமன்றமோ சாராயம் விற்று மக்களை கொல்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு மக்களை நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்று அறிவித்துவிட்டது. இனி என்ன தான் செய்வார்கள் மக்கள்?நாம் தமிழர் கட்சியினரை போல தமிழகமெங்கும் மக்கள் உருட்டுகட்டைகளைசாராய கடைகளுக்கு எதிராக எடுத்தால் தமிழக அரசு என்ன செய்யும்? .ஆனால் உருட்டு கட்டைகளை விட உங்கள் வாக்கு வலிமையானது.
மதுவிலக்கு அறிவிக்காத கட்சிகளுக்கு எங்கள் வாக்கு இல்லை என்று மக்கள் உறுதி ஏற்கவேண்டும். 2016 தேர்தல் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் தேர்தல்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியினர், இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் மதுபான கடைக்குச்சென்ற நாம் தமிழர் கட்சியினர் பணியிலிருந்த ஊழியர்களை வெளியேற்றினர். பின்னர் சவுக்கு கட்டைகளைக் கொண்டு, மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினர்.




No comments
Post a Comment