Latest News

July 17, 2015

செய்தியின் எதிரொலி உடனடியாக கருத்துக்கணிப்பை நிறுத்திய உதயன்
by admin - 0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு
வழமைபோலவே  இம்முறையும் உதயன் நிர்வாகியும் இயக்குனருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது உதயன் பத்திரிகை இணையமான உதயன்.கொம் என்ற தளத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்பை நடாத்தி வந்தது.



நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பு த.தே.கூட்டமைப்பிற்கும் எதிரான த.தே.மக்கள் முன்னணிக்குமான ஆதரவு நிலை மிகமோசமான நிலையை அடைந்திருந்தது.

நடைபெற்ற கருத்துக்கணிப்பில் த.தே.கூட்டமைப்பு அண்ணளவாக 30 வீதமான வாக்குகளையும் த.தே.மக்கள் முன்னணி அண்ணளவாக 62வீதமான வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

இதனை விவசாயி இணையம்  பதிவேற்றியதும் உடனடியாக சுதாகரித்துக்கொண்ட த.தே.கூட்டமைப்பு கட்சியின் உயர் பீடத்திற்கு அறிவித்திருக்கிறது இதையடுத்தே மேற்கண்ட கருத்துக்கணிப்பை நீக்கவேண்டிய நிலைக்கு தாம் உட்பட்டதாக இணையத்தள நிர்வாகப்பகுதியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்துக்கணிப்பு எவ்வளவாக உண்மையானதாக நடைபெறவிருக்கும் தேர்தலை ஆய்வுக்குட்படுத்தாவிட்டாலும். அதனை ஏற்றுக்கொள்ளமுடியாத தமிழரசு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் அழுத்தத்தின் பின்னர் அந்த கருத்துக்கணிப்பு உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கருத்துகணிப்பில் முன்னர் இருந்த கருத்துகணிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

முன்னர் பதிவிடப்பட்ட செய்திக்கு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் முன்னிலை.


« PREV
NEXT »

No comments