தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் முன்னிலை..!
இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான தமிழ் பத்திரிகையான உதயன் பத்திரிகையின் இணையத்தில்...
மக்களின் கருத்துக் கணிப்பில் "2015 தேர்தலில் நீங்கள் ஆதரிப்பது" என்ற தலைப்பில் முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இரண்டாவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மூன்றாவதாக ஈபிடிபி யையும் நான்காவதாக ஏனையவை என்றும் பதிவு செய்து மக்களின் விருப்பக் கருத்துக்களுக்காக வெளியிட்டிருந்தது.
அதில் இன்றைய நிலவரப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 29.86% எண்ணிக்கையையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 62.73% எண்ணிக்கையையும், ஈபிடிபி 4.40% எண்ணிக்கையையும் மற்றும ஏனையவை 3.01% எண்ணிக்கையையும் பெற்றுள்ளன.
இதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு முதலாவது தேர்தலை சந்திக்க தயாராக இருக்கும் "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது.
இதிலிருந்து இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த கால கூட்டமைப்பின் செயற்பாடுகளின் மீது மிகவும் விரக்தி அடைந்த நிலையிலேயே உள்ளனர் என்பதையும், புதிய மாற்று அரசியல் தலைமை ஒன்றை விரும்புவதையுமே உதயன் நாளிதழின் கருத்துக் கணிப்பின் மூலம் வெளிப்படையாகவே அறிய முடிகிறது.
உதயன் பத்திரிகையின் இணைய முகவரி:
- வல்வை அகலினியன்


No comments
Post a Comment