இவர்கள் கற்ற கல்விக்கேற்ப வேலை கிடைக்காமையினாலும், குடும்பவறுமை காரணமாகவும் தங்களை மாய்த்துக்கொள்ளும் நிலமைகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எமது எதிர்கால சந்ததியினரின் உரிமைக்கா தங்களை அர்ப்பணித்தவர்கள் இன்றும் பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கான வாழ்வை மேம்படுத்துவதற்குரிய நலத்திட்டங்களை தமிழ் அரசியல் தலைமைகள் கூட செய்ய கையாலாகாதவர்களாக இருக்கின்றனர். இந்த வகையில் கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் வன்னி இறுதி யுத்தத்தில் கால்களை இழந்த நிலையில் தொழில் இன்றி வாழ்ந்து வந்தார்கள்.
கிளிநொச்சி தொழில்நுட்பக்கல்லூரியில் கைத்தொலைபேசியை திருத்தும் பயிற்சியை முடித்திருந்தும் அவர்களுக்கு கைகொடுக்க யாரும் முன்வரவில்லை இந்நிலையில் இவ் இளைஞர்களால் உதவும் இதயங்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தொழில் முயற்சி ஒன்றை மேற்கொள்ளுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது.
தமிழர் கலாச்சார வட்டம் கைல்புறோன் ஜேர்மனியைச் சேர்ந்த அமைப்பு உடனடியாக இவ் இளைஞர்களுக்கு தொலைபேசி திருத்தும் கடையொன்றை உதவும் இதயங்கள் அமைப்பினூடாக அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளது. ரூபா மூன்று இலட்சத்தி எழுபத்தையாயிரம் செலவில் இவர்களுக்கான தொழில் முயற்சியை வலிவடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச.சஜீவன் அவர்கள் மூலம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.





No comments
Post a Comment