Latest News

July 17, 2015

பஷன் வீக்கில் கலக்கிய ஈழத்து தமிழ் பெண்
by admin - 0

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பும் இடம்பெற்றது மட்டுமின்றி எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைபுக்கு ஷோ ஸ்ரொப்பராக நடிகை சோனியா அகர்வால் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments