உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது , மிக் விமான கொள்வனவு மோசடி உட்பட பல விடயங்களில் குற்றம்சாட்டப்பட்டு தலை மறைவாகியிருந்து ரஸ்சியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஈரானிற்கான இலங்கை தூதரகத்திற்கு ஓரு மாதத்திற்கு முன்னர் சென்றுள்ளதை இலங்கை வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் உறுதிசெய்துள்ளார்.
மே 5 ம்திகதி அவர் குறிப்பிட்ட தூதரகத்திற்கு தனிப்பட்ட அலுவல்களிற்காக சென்றிருந்தார்,தன்னை தொடர்பு கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் வழங்கினார் என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் தூதரக அதிகாரிகள் அவர் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்ற மறுத்ததுடன் அவரின் இராஜதந்திர கடவுச்சீட்டை உடனடியாக ஓப்படைக்குமாறு கோரியுள்ளனர், அவர் அதனையும் ஏற்க மறுத்துள்ளார்.
இதேவேளை எற்கனவே வெளிவிவகார அமைச்சு அவரது இராஜதந்திர கடவுச்சீட்டை செல்லுபடியற்றது ஆக்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது, சகல தூதரகங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்sjhf அறிவித்துள்ளது.
கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிகக்கப்
பட்டமை குறித்து உக்ரைன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் முடிவிற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்,
வீரதுங்க மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யமுடியவில்லை.
அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவர் இலங்கை திரும்பவேண்டுமென இலங்கை அதிகாரிகள் விரும்புகின்றனர் என வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்ர்
No comments
Post a Comment