Latest News

June 10, 2015

ஐ.நாவின் இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்-பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல்
by Unknown - 0

எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் போலியான உள்ளக விசாரணைகளும், அனைத்துலகமும் சம்பந்தபட்ட நாடும் இணைந்ததான அரசியல் சாயம் பூசப்பட்ட கலப்பு விசாரணைகளும் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன என  பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தெரிவித்துள்ளார்.

இதுவே இலங்கை விவகாரத்திலும் நடக்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதெனவும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலையாளிகளின் பொறுப்புகூறலுக்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையினை பாரப்படுத்த வேண்டிய தேவை உள்ளதென பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் ஒரு பங்காளராக இணைத்துக் கொண்டு கருத்துரைக்கும் பொழுதே பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அவர்கள் மேற்குறித்த கூற்றினைத் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments