Latest News

June 10, 2015

இஸ்லாமிய வங்கி முறையை இலங்கையில் தடை செய்யவேண்டும் -பொதுபல சேனா
by Unknown - 0

இஸ்லாமிய ஷரியா விதிமுறைகளுக்கு அமைய இலங்கையில் இயங்கிவரும் வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த வித்தானகே இந்த கோரிக்கையை விடுத்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்:

ஷரியா விதிமுறைகளுக்கு உட்பட்ட வங்கி முறைகள் இலங்கையில் வேகமாக பரவி வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத நம்பிக்கைகளை சம்பந்தப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

இதன் மூலம் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் அதேவேளை, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறான திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று எமது அமைப்பு பலமுறை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த போதிலும், அவர்கள் அதனை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினரை சந்தித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
« PREV
NEXT »

No comments