Latest News

June 10, 2015

100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றது!
by Unknown - 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 42 ஆசனங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் எவ்வாறு வெற்றிபெற முடியும் என்பது மக்களின் கேள்வியாகும். அவர் ஜனாதிபதி ஆகியிருந்தால் எல்லோரையும் சிறையில் அடைத்திருப்பார் சிறைச்சாலைகளில் இடமிருந்திருக்காது என்று  முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான வழிகளிலேயே  பதவிகளுக்கு வந்துள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் யாருக்கும் நிம்மதி இருக்கவில்லை. அவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பல தடவைகள் நழுவிச்சென்றுள்ளன. அவ்வாறு கிடைத்திருந்தால், அவர் எல்லோரையும் சிறையில் அடைத்திருப்பார்' என்றார்.  

'மக்கள் இன்று விரக்தி மனப்பாங்கில் உள்ளனர். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. அரசாங்கம் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட, அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றது' என அவர் தெரிவித்தார்.  'அரசியலுக்காக தங்களின் இருக்கைகளை காப்பாற்றிக்கொள்வதற்காகவே இன்று அநேகமான அரசியில்வாதிகள் யதார்த்தை மறந்து செல்கின்றனர். இன்றுள்ள அரசியல் கொந்தளிப்பில் சரியான முடிவை எடுப்பதற்கான ஒரு சூழ்நிலை எமக்கு கிடைக்கும்வரையில் காத்துக்கொண்டிருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார்
« PREV
NEXT »

No comments