முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை படுகொலைசெய்வதற்கு சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மக்கள ஊடக நிலையம் என்ற புதிய அமைப்பொன்று இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.
விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ய முயற்சித்தல், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, பிரதமர் வழமைக்கு மாறான விதத்தில் செயற்படுகின்றமை, அமெரிக்கா போன்ற விடுதலைப்புலிகளுக்கு சார்பான நாடுகளில் வசித்த அதிகாரிகளை மீள அழைத்தல், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த அக்கறையின்மை காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது எழுத்து மூலஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
No comments
Post a Comment