Latest News

June 06, 2015

தேர்தலை முன்னிட்டு இணைப்புக் குழுவை கூட்டுமாறு சம்பந்தருக்கு கோரிக்கை!
by Unknown - 0

பொதுத் தேர்தல் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு தலைவர் இரா. சம்பந்தன் அவர்களூக்கு மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ,  புளொட் ஆகிய அமைப்புக்கள்  சேர்ந்தே இவ்வாறு இணைப்புக்குழுவைக் கூட்டுமாறு கோரியுள்ளன. 

இது தொடர்பில் தமக்கிடையே ஒன்றுசேர்ந்து ஆராய்ந்த இம்மூன்று கட்சியினரும் அது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். 

இதுகுறித்து  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில் 

தேர்தல் வேலைகளை ஐக்கிய தேசியக் கட்சி போன்றவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஆனால் தேர்தல் தொடர்பாகவே இப்போதுள்ள நிலைகுறித்தோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூடி எதனையும் பேசவில்லை. எனவே இந்த அசமந்தப்போக்கை தொடரமுடியாது. நாம், எதிர்காலத்தில் கூடி பேசி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. 

குறிப்பாக கூட்டமைப்பு சார்பாக எவ்வாறு வேட்பாளர்களை நியமிப்பது, பங்கிட்டுக்கொள்ளவது குறித்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது. 

எனவே அதன் முதற்கட்டமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் , டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சி பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளோம். 

பெரும்பாலும் ஒருவாரத்துக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழுவைக் கூட்டி பேசுமாறு நாம் கட்சித்தலைவர் சம்பந்தனிடம் போரிக்கை முன்வைத்துள்ளோம். 

இதுகுறித்த மூன்று கட்சிகளுக்கும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.
« PREV
NEXT »

No comments