எதிர்வரும் பொதுத் தேர்த லில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தீர்களா எனக் கேட்டபோது அவர் அதற்கு விடைதர மறுத்துவிட்டார்.
No comments
Post a Comment