Latest News

June 06, 2015

உதைபந்தாட்டஇறுதிப்போட்டிக்கு யாழமாவட்டத்தில் இரு அணிகள் தகுதி
by admin - 0


வடமராட்சி கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்டஇறுதிப்போட்டிக்கு யாழ் மாவட்டத்தில் இருபலம் வாய்த அணிகள் தகுதிபெற்றுள்ளது

கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் கடந்த ஒருமாதகாலமாக யாழ்மாவட்டஅணிகளுக்கிடையில் 7பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியே நடாத்தி வருகின்றது ,இதன் அரையிறுதிப்போட்டிகள் மின்னொளியில் நடைபெற்றது ,நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் எதிர் நாவன்துறை சென் மேரிஸ் அணிகள் மோதின இதில் 2-3என்ற கோல் கணக்கில் சென்மேரிஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவகியாது. 


இரண்டவாது ஆட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது ,இதில் இளவலை யங்கேன்றீஸ் எதிர் வதிரி டயமன்ஸ் அணிகள் மோதின ,இப்போட்டியில்2-5 என்ற கோல் கணக்கில் வதிரி டயமன்ஸ்அணிவெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குதகுதி பெற்றது
பல ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் இறுதிப் போட்டியில் நாவன்துறை சென்மேரிஸ்அணியே எதிர்து வதிரி டயமன்ஸ அணி மின்னொளியில் மோதவுள்ளது குறிப்பிடதக்கது.

செய்தி செல்வதீபன்

« PREV
NEXT »

No comments