வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் குறைகள் நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையொன்றை வியாழக்கிழமை நடாத்தி இருந்தார்கள்.
மக்களை நோக்கிய குறை நிவர்த்தி நடமாடும் சேவை என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த சேவையானது பாலிநகர் மகாவித்தியாலய மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் நடைபெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் வடமாகாண அமைச்சர்கள் , அமைச்சின் செயலாளர்கள் , மற்றும் அமைச்சுக்களின் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர் .
இந்த சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு இறப்பு சான்றிதழ், சமுர்த்தி சேவைகள், கமநலசேவைகள், காவல்துறை சேவைகள், தொழில் திணைக்கள சேவைகள், இலங்கை மின்சார சேவைகள், இலங்கை போக்;குவரத்து சேவைகள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சேவைகள், பிராந்திய நீரியல் இன விரியலாக்கல் நிலைய சேவைகள், திருமண பதிவுகள், அஞ்சல் திணைக்கள சேவைகள் உள்ளிட்ட சேவைகளை மக்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ள வந்த மக்களுக்கான போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

No comments
Post a Comment