கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஒரு தொகுதி போதைப் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை உயர்தரத்தில் கல்விபயிலும் 4 மாணவர்கள் இந்த போதைப் பாக்கை பாடசாலைக்கு எடுத்து வந்தமை என்ற குற்றச்சாட்டில் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள் மாணவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். மேலும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உயர்தரத்தில் கல்விகற்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் பாடசாலையில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
மேலும் குறித்த மாணவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரிடம் தமக்கு இருவர் போதைப் பாக்கை விற்பனை செய்ததாகவும் முறையிட்டனர். அதனடிப்படையில் வண்ணார் பண்ணை மற்றும் ஓட்டுமடம் பகுதியில் உள்ள இருவர் போதைப்பொருட்களை குறித்த மாணவர்களுக்கு விநியோகித்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் தயாரிக்கும் உபகரணங்கள் சிலவற்றை யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றினர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
Post a Comment