ஐ.நாவே ! சிறிலங்காவினை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து என்ற முழகத்துடன் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தொடர்பில் தொடங்கப்பட்டுள்ள பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் தமிழீழம் புலம் தமிழகம் என உலகப் பரப்பெங்கும் தீவிரமடைந்துள்ளது.
www.tgte-icc.org எனும் இணையவழி மூலமாகவும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்துப் போராட்டத்தில் தமிழீழ தாயக மக்கள் அதிகளவாக பங்கெடுத்து வருகின்றனர்.
புலம்பெயர் தேசங்களில் ஒஸ்றேலிய வாழ் தமிழர்கள் அதிகமான ஒப்பங்களை இணையவழி மூலமிட்டு மற்றடைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ள நிலையில் பிற நாடுகளில் இச்செயற்பாடுகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
மக்கள் கூடுகின்ற பொதுநிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கம் எதிர்வரும் யூலை15ம் நாள் நிறைவுகாணவுள்ளது.
தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பிலும் மாணவர் இயக்கங்கள் ஊடாகவும் இக்கெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஆபிரிக்க நாடுகளிலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment