ஶ்ரீலங்கா அரசால் தமிழீழத்தில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு நீதி கேட்டு ஶ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்த உலக அரங்கில் தமிழ் பேசும் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது இதில் குவைத் வாழ் தமிழ்மாறன் ரமேஷ், பொறியாளர் க.முருகேசன், கேசவன், கவாஸ்கர், குமார் மற்றும் அன்பு அனைவரும் சேர்ந்து கையெழுத்தைப் (21-05-2015) நேற்றும் அனைத்து குவைத் வாழ் மக்களிடமும் கையெழுத்தை பெற்றார்கள். தங்களுடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டிய கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய கையெழுத்து வேட்டை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று விவசாயி இணையத்துக்கு தமிழ்மாறன் அவர்கள் தெரிவித்தார்.
http://www.tgte-icc.org/
http://www.tgte-icc.org/
No comments
Post a Comment