Latest News

June 22, 2015

கென்யாவில் இன மோதல்களுக்கு இப்படியும் ஒரு தீர்வு!
by Unknown - 0

கென்யாவில் இரண்டு இனக்குழுக்களிடையே நூதனமான வகையில் மோதல் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து வகுப்புவாதக் கலவரம் நடைபெறும்போது, கொல்லப்படும் ஒவ்வொரு நபருக்கும் அடுத்த தரப்பு ஐம்பது பசுமாடுகளை அளிக்க இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

துர்கானா மற்றும் சம்பூரு ஆகிய அலைந்து திரியும் பழங்குடியின மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கையை அடுத்து இருதரப்பும் அடுத்தவரை இழிவுபடுத்தும் வகையில் அழைப்பதும் நிறுத்தப்படும்.

இந்த இரண்டுக் குழுக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவதும், அடுத்தவர்களின் கால்நடைகள் களவாடபடுவதும் வழக்கமான ஒன்றாகும்.
இவைமட்டுமன்றி மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இரு பழங்குடி இனத்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின்போது கொல்லப்பட்ட சுமார் ஐம்பது பொலிசாரிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்கவும் இந்த இருகுழுக்களும் இணங்கியுள்ளன.

அந்த மோதலே கென்யாவில் காவல்துறையினர் மீது நடைபெற்ற மிக மோசமானத் தாக்குதலாகும்.
« PREV
NEXT »

No comments