காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஒரு சாரர் கிசுகிசுக்கும் நிலையில், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், காபி வித் டிடி' இவரது பிரத்யேக நிகழ்ச்சியாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.
No comments
Post a Comment