எகிப்தின் லக்ஸர் நகரில் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் இடமொன்றில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அங்குள்ள பழங்கால கர்னாக் ஆலய வளாகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பை நோக்கி மூவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவற்றில் இருவர் அங்கு கடமையில் இருந்த காவல்துறையினரை நோக்கிச் சுட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய எதிர் துப்பாக்கிச் சூட்டில் அந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மூன்றாவது நபர் பின்னர் தன்னைத் தானே வெடித்து சிதற வைத்துக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அருகாகையில் இருந்த பல வழிப்போக்கர்கள் காயமடைந்துள்ளனர்.
நைல் நதிக்கரையில் இருக்கும் உலகக் பிரபலமான அந்த சுற்றுலா மையத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
எனினும் கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியும், குண்டுகளை வீசியும் வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் எனும் சந்தேங்கங்கள் எழக்கூடும் என்று கூறப்படுகிறது.
No comments
Post a Comment