Latest News

June 10, 2015

2026 உலகக் கோப்பை-விண்ணபங்கள் ஒத்தி வைப்பு
by Unknown - 0

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி மற்றும் இதர போட்டிகளை நடத்த உரிமம் கோரும் நடைமுறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த நடைமுறை ஒத்திவைக்கப்படுவதாக ஃப்ஃபாவின் பொதுச் செயலர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் ஃபிஃபாவின் பல அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து வரும் வேளையில், முதல் முறையாக தமது நிறுவனத்தின் செயல்பாடுகளை நியாயப்படுத்தியுள்ளார் அதன் பொதுச் செயலர் ஜெரோம் வால்கே.

ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை நடத்தும் ஒரு மையத்தை பார்வையிடச் சென்றபோதே வால்கே இதைத் தெரிவித்துள்ளார்.

ஃபிஃபாவின் பல அதிகாரிகள் பெரும்பாலும் பிராந்திய சங்கங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பதால், தமது அதிகாரிகளை ஃபிஃபாவால் ஓரளவே கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜெரோம் வால்கே கூறுகிறார்.

இதேவேளை தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள செப் பிளாட்டருக்கு அடுத்து புதிய தலைவரைத் தேர்தெடுக்க ஃபிஃபாவின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறக் கூடும் என பிபிசி அறிந்துள்ளது.
« PREV
NEXT »

No comments