Latest News

June 02, 2015

நிலவுக்கு மனிதனை அனுப்பியதை போன்ற முயற்சி இயற்கை மின்சாரத்துக்கும் தேவை!
by Unknown - 0

அடுத்த பத்து ஆண்டுகளில் நிலக்கரியை பயன்படுத்தி உருவாக்கப்படும் மின்சாரத்தைவிட, சூரியசக்தி உல்ளிட்ட இயற்கை மூலங்களில் இருந்து உருவாக்கப்படும் மின்சாரத்தின் விலை மலிவானதாக மாற்றவேண்டும் என்று முக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் பொருளாதார நிபுணர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அரசுகள் கூட்டாக இணைந்து செயற்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1960களில் நிலவுக்கு மனிதனை அனுப்புவது சாத்தியமில்லை என்று பலரும் எண்ணியிருந்தபோது அதை நிகழ்த்திக்காட்டும் நோக்கத்துடன் 1960களில் உலகின் திறமையான மூளைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் அப்பல்லோ விண்வெளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்மாதிரியாகக்கொண்டு அதே போன்றதொரு உலகுதழுவிய முயற்சி இந்த விஷயத்துக்காகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான செயற்திட்டத்துக்கு தேவைப்படும் 1500 கோடி அமெரிக்க டாலர் நிதிஒதுக்கீட்டை ஆண்டுதோறும் வழங்குவதற்கு பெரும்பான்மை நாடுகள் தமது ஒப்புதலை வழங்க முன்வரவேண்டும் என்று இந்த குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

பிரிட்டனின் சுற்றுச்சூழலுக்கான சிறப்பு தூதர் சர் டேவிட் கிங் தலைமையிலான இந்த குழுவினர் அடுத்த வாரம் ஜெர்மனியில் நடக்கவிருக்கும் ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் இது தொடர்பான தமது திட்டத்தை வெளியிடவிருக்கிறார்கள்.
« PREV
NEXT »

No comments