பாரிஸில் அமைந்துள்ள காதல் பூட்டு பாலம் நெப்போலியன் காலத்தில் கட்டப்பட்டது.
இந்த வரலாற்று புகழ்மிக்க பாலத்தின் தடுப்பு சுவரில் காதலர்கள் தமது காதலின் அடையாளமாக ஒரு பூட்டை பூட்டி விட்டு அதன் சாவியை ஆற்றில் எறிந்து விட்டு செல்வர்.
அந்த பாலத்தில் தற்போது ஒரு மில்லியன் வரையிலான பூட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட இந்த பூட்டுக்களின் எடை சுமார் 45 கிலோ என பாரிஸ் மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த பூட்டுக்கள் பூட்டப்பட்டிருந்த பாலத்தின் பாதுகாப்புக் கம்பிகளின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததையடுத்து இதை அகற்றுவது என மாநகர சபை முடிவு செய்தது.
மேலும், இந்தப் பாலத்தில் இனி காதல் பூட்டுக்கள் பூட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் தொடர்ந்தும் காதலர் தலைநகரமாகவே இருக்கும். இந்த பாலத்தில் காதலர்கள் காதல் ஜோதி ஏற்றலாம். தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், காதல் பூட்டுக்களைப் பூட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது, என மாநகர சபை தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment