Latest News

June 02, 2015

எனது மனைவி மிகவும் அற்புதமானவர்-பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூன்
by Unknown - 0

பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூன் சமீபத்திய போட்டியில் சமந்தா மாதிரி ஒரு அற்புதமான மனைவி கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என்று தனது மனைவியை புகழ்ந்து பேசியுள்ளார். 

பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஐரோப்பியாவில் உள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது மனைவி சமந்தா காமரூன்(Samantha Cameron 44) தனது குழந்தைகளுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள தீவுகளில் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் இபிசா(Ibiza) தீவில் பிக்னி உடையுடன் சமந்தா இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியானது. மேலும் இந்த வயதிலும் அவர் தனது உடலை சிறந்த முறையில் வைத்திருப்பதாகவும் பாராட்டியுள்ளன.

இந்நிலையில் சமந்தா பிக்னி உடையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் குறித்து டேவிட் காமரூனிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் சமந்தா போன்று ஒரு அற்புதமானவர் மனைவியாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அரசு முறை பயணமாக நான் ஐரோப்பா முழுவதும் சுற்றுகையில் அவர் குழந்தைகளுடன் விடுமுறையை சந்தோசமாக அனுபவிப்பதை நினைக்கும் போது பொறாமையாக இருக்கிறது என்று வேடிக்கையாக கூறினார்.

மேலும் உடலை கச்சிதமாக வைத்துகொள்வதற்கு சமந்தாவை விட தான் அதிகம் ஆசைப்படுவதாகவும் ஆனால் உணவு விசயத்தில் அவரை போல் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தான் மேற்கொள்ளும் பயணத்தின் போது ஐரோப்பிய நாடுகளில் சிறந்த உணவுகள் வழங்கப்படுவதால் உணவுக்காட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments